மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகை 36 வயதுடைய பெண்
09 May,2024
இந்தியப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதுடைய பெண் ஒருவரே சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (9) காலை 4.55 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தனது பயணப் பொதியை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பயணப் பொதியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 75 கிராம் நிறையுடைய ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதோடு கைதான பெண் உடைகள் மற்றும் தொலைபேசி உதிரிப் பாகங்களை விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட பெண் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.