மகளும் தோழியும் பாலியல் துஸ்பிரயோகம், தந்தை கைது
27 Apr,2024
பதின்மவயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தையொருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன் சொந்த மகளையும் மகளின் தோழியையும் குறித்த நபர் துபிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபராவார். சம்பவத்தில் 12 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளனர்.
பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.