கோர விபத்து, பாரஊர்தி ஏறியதில் இராணுவ வீரர் உயிரிழப்பு
26 Apr,2024
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து; பாரஊர்தி ஏறியதில் இராணுவ வீரர் உயிரிழப்பு | Horrific Accident That Happened Today In Murikandi
பாரஊர்தி ஏறியதில் இராணுவ வீரர் உயிரிழப்பு
கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முன் நோக்கி முற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த கப் வாகனம் திடிரென இயங்காமல் நின்றுள்ளது. எதிரே வந்த வாகனம் நேருக்கு மோதாமல் தடுக்கும் நோக்குடன் சாரதி பாரஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.
இதன்போது, கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்ததில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.