முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாகிச் சூட்டில் இருவர் பலி
23 Apr,2024
காலி மொரகஹஹேன மிரிஸ்வத்த பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மொரகஹனே டயர் தொழிற்சாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.