கப்பல் மார்க்கமாக இலங்கை வரும் பயணிகளுக்கான ஒன்லைன் விசா முறை!
20 Apr,2024
கப்பல் மார்க்கமாக இலங்கை வரும் பயணிகளுக்கு புதிய ஒன்லைன் விசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நான்கு நாட்களுக்கு இந்த ஒன்லைன் விசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதன் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் நிமல் குணவர்தன தெரிவித்துள்ளார் .