பிரபல ஆடைத் தொழிற்சாலை வர்த்தகரின் லீலைகள், அம்பலத்திற்கு வந்த தகவல்களால் அதிர்ச்சி!
25 Mar,2024
தென்னிலங்கையில் உள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நிர்வாக இயக்குனரான வர்த்தகர் தொடர்பில் அங்கு பணிபுரியும் யுவதிகளை தன் பாலிய இச்சைக்கு பயன்படுத்துவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த வர்த்தகருக்கு பல கிளைகள் கொண்ட குறித்த ஆடைத் தொழிற்சாலைகள் தென்பகுதிகளில் உள்ளதாகவும் அங்கு பலர் வேலை செய்துவருவதாகவும் கூறப்படுகின்றது.
கன்னிகளாக உள்ள யுவதிகளை தேர்வு செய்யும் வர்த்தகர்
இந்நிலையில் அங்கு பணிபுரியும் சிங்கள யுவதிகளில் கன்னிகளாக உள்ள யுவதிகளை வர்த்தகர் தனது பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இவ்வாறான யுவதிகளை தெரிவு செய்வதற்கு என்றே குறித்த ஆடைத் தொழிற்சாலைகளில் அங்கேயே சில பெண் முகவர்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறப்படுகின்றது.
அவர்கள் மூலமாகவே இவ்வாறான பெண்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்றும், திருமணமாகாத 18, 19, 20 வயதுகளையுடைய யுவதிகளில் கன்னிப் பெண்களையே வர்த்தகர் தமது இச்சைக்கு பயன் படுத்துவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
அண்மையில் குறித்த வர்த்தகரின் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் யுவதி ஒருவரால் இத் தகவல் அவளது காதலனுக்கு தெரிவிக்கப்பட்டு நிலையில், காதலன் இது தொடர்பாக ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்துடன் முரண்பட்ட போது அவனை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.