கோட்டாபயவின் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் போதைப்பொருளுடன் கைது!
19 Mar,2024
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய முன்னாள் சிறிலங்கா இராணுவ லான்ஸ் கோப்ரல் ஹெரோயின் போதைப்பொருளுடன் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போதைப்பொருள் வியாபாரம் செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோட்டாபய அதிபர் பதவியை விட்டு வெளியேறிய பின்னர்
கோட்டாபய ராஜபக்ச அதிபராக பதவி வகித்த போது, அவருக்கு உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக இருந்த அவர் கோட்டாபய அதிபர் பதவியை விட்டு வெளியேறிய பின்னர் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளார்.