முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் காலமானார்
28 Feb,2024
முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் (98) இன்று மாலை காலமானார்.
1977 ஆம் ஆண்டு மறைந்த அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் இலங்கையில் திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினார்.
அதிக வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்தவர்
1977 முதல் 1987 வரை அதிக வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்தவர் மறைந்த டி மெல். நாட்டிலேயே அதிக காலம் நிதியமைச்சராக இருந்தவர்.
அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் (SLFP) இணைந்து அரசியலைத் தொடங்கினார், பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) க்கு சென்றார்.