இலங்கையில் இந்தியாவின் அரசியல் நகர்வு அம்பலம்
09 Feb,2024
இலங்கையில் தமது கட்சியின் அரசாங்கம் வரும் என்ற நம்பிக்கையில் தேசிய மக்கள் சக்தியுடன் இந்தியா இணைந்து செயற்படுவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக நாம் கருத்து கூறுவது என்ற விடயம் தவறானது. ஒரு நாட்டை எப்படி எதிர்க்க முடியும் நாம் அப்படி இருக்க முடியாது.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க அங்கு பல்வேறு தலைவர்களையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே எண்ணெய்க் குழாய்களை அமைப்பது தொடர்பான முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (08) இந்தியாவின் எரிசக்தி வாரத்தையொட்டி இந்திய எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரிகளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சந்தித்த போதே இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேற்படி எண்ணெய்க் குழாய்களை அமைப்பது தொடர்பான முன்மொழிவுகளை இந்திய எண்ணெய் நிறுவனம் சமர்ப்பித்துள்ள போதிலும் இதற்கு சாத்தியமான மற்றும் தேவையான முதலீட்டாளர்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், குறித்த முன்மொழிவின் பிரகாரம் இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் திருகோணமலையின் டேங்க் ஃபார்ம் மற்றும் கொழும்பு ஆகியவற்றை இணைக்கும் விதமாக இந்த எண்ணெய்க் குழாய் திட்டத்தினை இந்திய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இந்த திட்டம் குறித்த தொழில்நுட்ப ஆய்வுகள்,சந்தைத் தேவைப் பகுப்பாய்வு, நிதிப் பகுப்பாய்வு மற்றும் வணிக மாதிரிகள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு, திட்டம் தொடர்பான பொறிமுறை தீர்மானிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
திருகோணமலை தொட்டி பண்ணை, சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL), மற்றும் லங்கா இந்தியன் ஒயில் கம்பனி (LIOC) ஆகியனவற்றின் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் கூட்டு முயற்சியின் கீழ் முதலீடுகள் மற்றும் திட்டங்களை விரிவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.