குவைத்தில் தங்கியிருந்த 35 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
30 Nov,2023
.
சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த 35 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, விசா இன்றி குவைத்திற்கு வேலைக்குச் சென்று தங்கியிருந்த 33 வீட்டுப் பணியாளர்களும் இரண்டு வீட்டுப் பணியாளர்களும் நேற்று (29.11.2023) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
.
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குழுவினர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.