ரணிலுடன் இணைந்து சதி செய்தவர்கள் நாங்களே..பகிரங்கமாக கூறிய மரிக்கார் எம்.பி
29 Nov,2023
.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை விட அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் நாங்கள்தான் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ். எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, அதிபர் ரணில், காலை, மதியம், மாலை, என்னென்ன கூறுகிறாறோ அவை அனைத்தும் எமக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
.
மேலும், அதிபருடன் இணைந்து செயற்படுவது சாத்தியமற்றது என கூறிய மரிக்கார், அவரிடமிருந்து வேலை பெறும் வழி தனக்கு நன்றாக தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.