படகு கடலில் கவிழ்ந்து விபத்து; ஜப்பானியர் உட்பட 4 பேர் மீட்பு
20 Nov,2023
.
பொழுதுபோக்குக்காக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜப்பான் பிரஜை உள்ளிட்ட நால்வர் அடங்கிய படகு நீரில் மூழ்கியதில், அதிலிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தம் கடந்த 2023.11.18 இரவு 7:15 மணியளவில் இடம்பெற்றதாகவும், இப்படகில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.
படகு கடலில் மூழ்கியபோது அதிலிருந்த இருவர் உயிர் காக்கும் அங்கியை அணிந்திருந்ததால் அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டனர்.
.
ஏனையோர் நேற்றைய தினம் காலை 7 மணியளவில் சிலாபம் இரணவில கடற் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்ட தேடுதலுக்குப் பின்னர் அவர்கள் பயணம் செய்த படகும் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்டுள்ள ஜப்பான் பிரஜை மாரவில அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது 70 இலட்சம் ரூபா பணம் மற்றும் கடவுச்சீட்டு காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.