வெளிநாட்டிலிருந்து வந்தவர் விமானத்திற்குள் வைத்து கைது
17 Nov,2023
வெளிநாடொன்றிலிருந்து வந்தவரை விமானத்திற்குள் வைத்தே சுங்க அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வியாழக்கிழமை அதிகாலைவேளை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு-02 கொம்பனித் தெருவில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவர் இன்று அதிகாலைவேளை 01.40 மணியளவில் டுபாயிலிருந்து Fly Dubai Airlines இன் FZ-569 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது அவர் வந்த விமானத்திற்குள் பிரவேசித்த கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்ததுடன், அவரது பயணப் பொதிகளை கைப்பற்றினர்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர் விமானத்திற்குள் வைத்து கைது : கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை சம்பவம் | A Foreigner Was Arrested Inside The Plane
அவரது பயணப்பொதியில் 06 கிலோ 423 கிராம் 9 மில்லிகிராம் எடையுள்ள தங்க ஜெல், 16 மாத்திரைகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தங்க ஜெல் கையிருப்பு அரசு இரசாயன பகுப்பாய்வாளருக்கு ஆய்வு அறிக்கையைப் பெற அனுப்பப்பட்டுள்ளதுடன் அவரது கையடக்கத் தொலைபேசி தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையைப் பெறவும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த அறிக்கைகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைக்கும் வரை அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.