கனடாவில் இருந்து இலங்கை வந்த குஷ் போதைப்பொருள் அதிகாரிகள்அதிர்ச்சி!
16 Nov,2023
,
கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து ஒரு தொகை குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
,
,
கடந்த மாதம் 25 ஆம் திகதி சுங்க வருமான கண்காணிப்பு குழுவினர் நாட்டுக்கு வந்த கொள்கலன் ஒன்றினை சந்தேகத்தின் பேரில் பறிமுதல் செய்தனர்.
.
இதனையடுத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அங்கு 6 கிலோ குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
,
கொள்கலனில் மீட்கப்பட்ட குஷ் போதைப்பொருள் சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதி எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போதைப்பொருள் கனடாவில் இருந்து கணேமுல்ல பிரதேசத்திலுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
.
அத்துடன், இந்த பொதியின் உரிமையாளர் சார்பாக வந்த முகவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
.
அதேவேளை இதற்கு முதல் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் 35 கிலோ ஹாஷிஷும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் 10.5 கிலோ குஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.
..
அத்துடன் கடந்த 3 மாதங்களில் 50 கிலோ கிராம் குஷ் மற்றும் ஹாஷிஷ் சட்டவிரோத போதைப்பொருள் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.