கனடாவுக்கு. செல்ல முயன்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
16 Nov,2023
.
கனடாவுக்கு .செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை குடிவரவு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடா செல்ல முயற்சித்த நிலையில் இந்த கைது சம்பபவம் இடம்பெற்றுள்ளது.
.
சந்தேக நபர் மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதான தமிழர் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.