இலங்கை - ரஷ்யா இடையிலான நேரடி விமான சேவை
01 Nov,2023
ரஷ்யா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதலாவது நேரடி விமானமான அஸூர் ஏர் இன்று (01.11.2023) காலை 332 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
விமானம் நீர் பீரங்கி வணக்கங்களுடன் முதலில் வரவேற்கப்பட்டு, பின்னர் விமானத்தில் வந்திருந்த பயணிகள் பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
இன்று முதல் ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், அஸூர் ஏர் நிறுவனம் ரஷ்யாவின் வெனுகோவ், டோல்மோசேவ், கிரானோயார்ஸ்க் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இடங்களில் இருந்து வாரத்திற்கு நான்கு விமானங்களை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.