இந்தியாவில் தரையிறக்கப்பட்ட இலங்கை விமானங்கள்
30 Oct,2023
.
நாட்டில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களில் விமானங்களை தரையிறக்க முடியாத சூழ்நிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில், சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.
.
ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு வந்த UL 365 விமானமும், மாலைதீவில் இருந்து UL 116 விமானமுமே இவ்வாறு, இந்தியாவில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.