வெளிநாட்டு யுவதிக்கு நடந்த அதிரிச்சி சம்பவம்!
28 Oct,2023
இலங்கையில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான சீகிரியாவை பாரத்துவிட்டு மீண்டும் தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரின் பணப்பையை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை 13 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களின் உதவியுடன் சீகிரிய பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (26-10-2023) காலை, சீகிரியாவுக்குச் சென்று மீண்டும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த 22 வயதான துருக்கி பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கிவிட்டு, அவரது பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அதிவேகமாக பயணித்த இந்த மோட்டார் சைக்கிள்களை வீதியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் பார்த்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் தொடர்பில் சந்தேகம் அடைந்த சிறுவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளின் எண்ணை மனதில் வைத்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பின்னர், சிறிது நேரத்திற்கு முன், இரு சந்தேக நபர்கள் துருக்கி யுவதியின் பணப்பையை கொள்ளையடித்துவிட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
இதன்படி, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பெண் தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அந்த எண்ணை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களின் சாமர்த்தியமான செயற்பாட்டால் சந்தேகநபர்கள் இலகுவாகவும் விரைவாகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டு யுவதியின் பணப்பையில் 225 அமெரிக்க டொலர்களும் 20,000 இலங்கை ரூபாவும் இருந்துள்ளன.