ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் கொண்டுவரப்பட்டள்ளது
28 Oct,2023
.
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டள்ளது.
தாக்குதலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணான அனுலா ரத்நாயக்கவின் சடலத்தை ஏற்றி வந்த விமானம் இன்று (28.10.2023) காலை கட்டுநாயக்கவை வந்தடைந்தது.
.
இந்நிலையில், அனுலாவின் சடலத்தை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.
.
கடந்த 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலிய பெண் ஒருவரை பராமரித்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனுலா ரத்நாயக்க உயிரிழந்தார்.