ஹோட்டலுக்குள் புகுந்து யுவதியை பலவந்தமாக கடத்திய மர்ம கும்பல்!
19 Oct,2023
.
ஹொரண பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் இனந்தெரியாத கும்பல் புகுந்து யுவதி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
.
ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பெண்ணொருவரை பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே கடத்தி சென்றுள்ளனர்.
.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் ஊழியர்கள் பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக செயற்பட்ட ஹொரணை பொலிஸ் அதிகாரிகள், கடத்தப்பட்ட பெண்ணை சுமார் 3 மணித்தியாலங்களில் கண்டுபிடித்துள்ளனர்.
.
மேலும், கடத்தலை மேற்கொண்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பண்டாரகம, அங்குருவத்தோட்ட வீதியில் லெனவர உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.