சிறையிலிருந்து தப்பி சட்டத்தரணியின் கழுத்தை நெரித்த குற்றவாளி
18 Oct,2023
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கலகெதர நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்று நீதிமன்றில் சட்டத்தரணி ஒருவரை கழுத்தை நெரித்து காயப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கண்டி, களுவான பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், 750 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த போது கலகெதர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக நீதிமன்ற அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் இடம்பெற்ற களேபரம் : சிறையிலிருந்து தப்பி சட்டத்தரணியின் கழுத்தை நெரித்த
உடனடியாக செயற்பட்டகாவல்துறை மற்றும் சிறை அதிகாரிகள் சட்டத்தரணியை காப்பாற்றினர். சம்பவத்தில் காயமடைந்த சட்டத்தரணியை உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எச்.எம்.லலித் சந்தருவன் என்ற சந்தேக நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.