ஹமாஸ் அமைப்பால் இலங்கை பெண் படுகொலை : ஒப்படைக்கப்படவுள்ள சடலம்
17 Oct,2023
இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கை பெண் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அனுலா ஜயதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஹமாஸ் அமைப்பினராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்குள் சடலம் ஒப்படைப்பு
அதன்படி, இவ்வாறு உயிரிழந்த அனுலா ஜயதிலக என்ற பெண்ணின் சடலம் இன்னும் இரண்டு நாட்களுக்குள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.