தென்னிலங்கை வன்முறைகளின் பிண்ணனியில் கோட்டா: குற்றஞ்சாட்டும் சரத் பொன்சேகா
10 Oct,2023
தென்னிலங்கையில் நடைபெற்ற பல வன்முறை செயல்களுக்குப் பிண்ணனியில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான குழுவினரே இருந்தார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை இணைய செனல் ஒன்றுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் குழு
இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் பொதுவாக இது தொடர்பில் குற்றம் சுமத்தக்கூடாது, தான் இராணுவத் தளபதியாக செயற்பட்ட போது கொழும்பில் சில நடவடிக்கைகளுக்கு நேரடியாக உத்தரவு வழங்கவில்லை எனவும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தற்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயும் கோட்டாபய ராஜபக்சவின் குழுவில் இடம்பெற்றிருந்ததாக பொன்சேகா வெளிப்படுத்தியுள்ளார்.