கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா நிதி உதவி
06 Oct,2023
கொழும்பு, கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை பஸ் மீது மரம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.