சீன கப்பலின் இலங்கை விஜயம் எப்போது? - பிற்போடுமாறு கோருகின்றது இலங்கை ; பிடிவாதம் பிடிக்கின்றது சீனா
04 Oct,2023
சீனா கப்பல் இலங்கைக்கு எப்போது விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்ற விடயத்தில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை சீன கப்பலின் விஜயத்தினை பிற்போடவேண்டும் என கருதுகின்ற போதிலும் தனது கப்பல் ஒக்டோபர் மாதம் இலங்கையை சென்றடையவேண்டும் என சீனா வலியுறுத்துகின்றது என தெரியவருகின்றது.
சீனாவிற்கான தனது விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி சீனா ஜனாதிபதியுடன் இது குறித்து ஆராயவுள்ளார்.
சி யான் 6 விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல் 60 பேர் அதில் உள்ளனர் என தெரிவித்துள்ள சீனாவின் உத்தியோகபூர்வ ஒலிபரப்பு சேவையான சிஜிடின் இந்த கப்பல் கடல் புவியியல் கடலியல் மற்றும் கடல் சோதனைகளை மேற்கொள்கின்றது என தெரிவித்துள்ளது.
எனினும் இந்திய ஜப்பான் அமெரிக்கா ஆகியநாடுகள் சீனாவுடன் புவிசார் அரசியல் மோதலில் ஈடுபட்டுள்ளதால்கப்பல் குறித்து அதிக ஆர்வத்துடன் உள்ளன.
இந்த விடயத்தி;ல் முத்தரப்பு அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள இலங்கை இலங்கை கடற்பரப்பி;ல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து சீன அதிகாரிகளிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
சீன கப்பல் தனது இலங்கை விஜயத்தின் போது வடபகுதி கடற்பரப்பை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
புவிசார்ரீதியில் நெருக்கமாக உள்ள பகுதி குறித்தே இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளதால் வடபகுதி கடற்பரப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பில் இம்மாதம் ஐஓஆர்ஏ உச்சிமாநாடு இடம்பெறுவதால் அந்த விடயத்தில் மும்முரமாக உள்ள இலங்கை சீன கப்பலி;ன் விஜயத்தினை நவம்பரில் நடத்தவேண்டும் என விரும்புகின்றது - இந்த உச்சிமாநாட்டிற்கு பல சர்வதேச பிரதிநிதிகள் வருகை தரவுள்ளனர்.
எனினும் சீனா தனது கப்பல் இந்தமாதமே இலங்கைக்கு செல்லவேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது.
இந்த விடயம் ரணில்வி;க்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு மற்றுமொரு சவாலாக அமைய்பபோகின்றது இலங்கை இந்தியாவின் கரிசனைகளை போக்கவேண்டிய அதேவேளை சீனாவையும் அரவணைக்கவேண்டிய நிலையில் உள்ளது - கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனாவின் ஆதரவு இலங்கைக்கு அவசியம்.