விடுதலைப்புலிகள் பலவீனமடைய யார் காரணம்: உண்மையை உடைத்தது அரசாங்கம்
22 Sep,2023
விடுதலைப்புலிகள் பலவீனமடைய அந்த அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அரசுக்கு தகவல் வழங்கியதே காரணம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரிந்து சென்றோர் வழங்கிய தகவல்
விடுதலைப்புலிகள் பலவீனமடைய அந்த அமைப்பில் இருந்தோர் பிரிந்து சென்று அரசுக்கு தகவல் வழங்கியது தான் காரணம். உங்கள் ஆட்சியில்(நல்லாட்சி) தான் அதுவும் நடந்தது. அவ்வாறு இருக்கும் போது மீண்டும் மீண்டும் புலி என்று கூற வேண்டாம்.
அப்படிப்பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு கப்பலில் ஆயுதம் அனுப்பியதாகவும் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.. அவர்களுக்கும் நாம் புலி என்று கூற வேண்டுமே.. அப்படி கூறுவதில்லையே. அவ்வாறு கூற முடியாது. அது யுத்த தந்திரங்கள் என்றும் கூறலாம்.
ராஜபக்சர்கள் மீது அப்படி ஒரு பயம் ஏன்? சொல்வதை கேளுங்கள்.. நாங்கள் பிரேமதாச அவர்களுக்கு புலி என்றோ எதிர்க்கட்சித் தலைவருக்கு புலி என்றோ கூறவில்லை.
உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு
நாம் எச்சந்தர்ப்பத்திலும் உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு நல்லாட்சி அரசு காரணம் என்று கூறவில்லை. நல்லாட்சி அரசு உருவானதே முஸ்லிம் மக்களின் வாக்குகளால் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு கிழக்கு வாக்குகள் கிடைத்தன.
இதற்கான தீர்வு வேண்டுமெனின் கட்சி கட்சியாக பிரிய வேண்டாம். ஒன்றாக செயற்படுவோம். அதை விட்டு ஒவ்வொருவர் மீதும் விரல் நீட்ட வேண்டாம்.. நாம் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. ரிஷாத் எம் பியை நாம் குற்றஞ்சாட்டவில்லை.
கனடாவை விட்டு வெளியேறுங்கள்: இந்தியர்களை எச்சரிக்கும் காலிஸ்தான் அமைப்பு
கனடாவை விட்டு வெளியேறுங்கள்: இந்தியர்களை எச்சரிக்கும் காலிஸ்தான் அமைப்பு
நான் திருமணம் முடித்திருப்பவர் தமிழச்சியை, 83 கருப்பு ஜூலை கலவரத்தின் போது எனது மனைவியை வெளியே கூட்டிச் செல்லக் கூட முடியவில்லை. இன்றும் அன்றுபோலவே இனவாதத்தினை பரப்புகிறீர்கள், இவ்வாறு நாய் வேலை செய்யாதீர்கள்.. ” எனத் தெரிவித்தார்