சீனக் கப்பலினால் இலங்கை - இந்திய உறவில் ஏற்பட்டுள்ள விரிசில்
03 Sep,2023
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கைக்கான பயணத்தை இரத்துச் செய்தமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென தனது பயணத்தை இரத்து செய்தமைக்கு, சீன ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியது காரணமாக இருக்கலாமா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் புதுடில்லியால் அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
அமைச்சர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிக்கை
அத்துடன் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அதே இரவில் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது.
அமைச்சரின் விஜயம் 'ஒத்திவைக்கப்பட்டது' என்றும், இரத்துக்கான காரணங்களைத் தெரிவிக்காமல் புதிய திகதிகள் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 'தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக' விஜயம் இரத்து செய்யப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
ஒரு 'உளவு கப்பல்' மற்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கு விரோதமானது என்ற அடிப்படையில், இந்தியாவின் எதிர்ப்பிற்கு மத்தியில், தமது நாட்டில் தரித்து நிற்க இலங்கை அரசாங்கம் கொள்கையளவில் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை சீனக் கப்பலுக்கு இலங்கையில் தரித்து நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதுகுறித்த விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை இலங்கையின் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி நிறுவனம் கப்பலின் வருகையை வலுவாக ஆதரித்துள்ளது, தமது விஞ்ஞானிகளும் கப்பலின் பணியில் ஈடுபடுவார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.