மேல் மாகாண ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிப்பு
30 Aug,2023
மேல் மாகாண புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மீரிகம – பல்லேவெல பகுதியில் பல காலமாக நடத்திச் செல்லப்பட்ட ஆயுத களஞ்சியசாலை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நேற்று (29) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட போது இங்கு பல வகையான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிகள் தலா 40 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வெவ்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.