தீராத இன மோதல் உருவாகும்! தமிழ் அரசியல்வாதிகளை பகிரங்கமாக எச்சரிக்கும் விமல்
21 Aug,2023
69 இலட்சம் ஆணைக்கு முரணாக செயற்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் தமிழ் பிரிவினை வாத தீவிரவாதிகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க குருந்தூர் மலை விகாரை மட்டுமன்றி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தொல்பொருள் சின்னங்களையும் படுகொலை செய்ய வழியமைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலையில் நடைபெற்ற ரத்தன சூத்திரம் மற்றும் ஆசி வழங்கும் நிகழ்வின் போது பொங்கல் வழிபாடு செய்வதாக கூறி கஜேந்திரகுமார் உள்ளிட்ட குழுவினர் இழிவான செயலை செய்துள்ளனர்.
இது தீராத இன மோதலுக்கு இட்டுச்செல்லும் எனவும் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய பத்திரிகைகளின் கண்ணோட்டம்,