இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.
தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராணவன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று சீதாவை கடத்தி வந்ததாக குறிப்பிட்டால் பெரும்பாலானோர் நம்புவதில்லை. எமது வரலாற்றில் இன்றும் உயிர் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குரியாக உள்ளது.
மன்னராட்சி காலத்தில் சிங்கள பொறியியலாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறான நிலையில் இராவணன் விமானத்தில் சென்று சீதாவை கொண்டு வந்ததாக குறிப்பிடுவதை மறுக்க முடியாது என்று குறிப்பிடுகிறேன்.
இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.
தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும்.
மகாவம்சத்தில் இராணவன் சிறந்த தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இராவணனின் படை கொடியில் சிங்கம் சின்னம் உள்ளது.
இந்தியா இராவணன் மீது இன்றும் அச்சம் கொண்டுள்ளதால் தான் வருடாந்தம் அவரது உருவத்தை எரிக்கிறார்கள். ஆகவே இராணவன் சிங்கள தலைவர் என்றார்.
இராவணன் தமிழ் மன்னனா ? அல்லது சிங்கள மன்னனா ?
இராவணன் தமிழ் மன்னனா ? அல்லது சிங்கள மன்னனா ?என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது. அவர் இலங்கையை ஆண்ட சிறந்த அரசர்களில் ஒருவர் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு நோக்க வேண்டும்.
மகாவம்சத்தில் மறைக்கப்பட்ட இராவணன் யுகத்தை வால்மீகியே வெளிக்கொண்டு வந்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
மகாவசம்சத்தில் மறைக்கப்பட்ட இராவணவனின் யுகத்தை வால்மீகி இராமாயணத்தில் வெளிக்கொண்டு வந்ததையிட்டு வால்மீகிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இராவணன் வரலாற்று கதைகளை வெறும் கற்பனை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல விடயங்கள் உண்மை தன்மையாகவே காணப்படுகிறது.
இராவணன் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு சிறந்த மாவட்டமாக மாத்தளையை தெரிவு செய்ய வேண்டும்.
இராவணன் புஷ்பக விமானத்தை தரித்ததை, சீதா தேவி இருந்த இடம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மாத்தளை பகுதியில் வரலாற்று அம்சமாக இன்றும் குறிப்பிடப்படுகிறது.
இராவணன் சிறந்த அரசர் என்பதற்கு பல ஆதாரங்கள் சான்றுகள் காணப்படுகின்றன. 10 பிரதேசங்களை ஆண்டதாலும், 10 கலைகளில் தேர்ச்சிப்பெற்றதாலும் அவர் 10 தலையுடைய இராவணன் என்று போற்றப்பட்டார். இராவணன் இலங்கை மன்னன் என்ற கோணத்தில் இருந்துக் கொண்டு நோக்க வேண்டும்.
இராவணன் தமிழ் மன்னனா ? அல்லது சிங்கள மன்னனா? என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது. அவர் இலங்கையின் சிறந்த அரசர்களில் ஒருவர் என்பது உண்மை. ஆகவே வரலாற்றுக்களை சிறந்த முறையில் ஆய்வு செய்து அவற்றை நாட்டின் எதிர்காலத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்றார்.