கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் சேவை
29 Jul,2023
.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சேவை பிரிவொன்று நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வகையில், பயணிகள் போக்குவரத்து சேவையான பேருந்து சேவையே இவ்வாறு நிறுத்துவதற்கு விமான நிலைய அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
.
கடந்த 6 மாத காலமாக விமான நிலை வளாகத்திற்குள் நுழைவதை நிறுத்தியிருந்த பேருந்து சேவை, இரண்டு நாட்களுக்கு முன்னரே விமான நிலைய தலைவர் அளித்த அனுமதியின் பேரில் உள்நுழைய ஆரம்பித்தது.
ஆனால் இன்று காவல்துறையினர் பேருந்துகளை அகற்றுமாறு தகவல் தெரிவித்ததையடுத்து மீண்டும் எவரிவத்தை பேருந்து நிலையம் வரையிலும் பேருந்துகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை முச்சக்கர வண்டி சாரதிகள் சந்தித்த பின்னர், விமான நிலையத்தைச் சுற்றி இருந்த பேருந்துகளை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.