இலங்கைக்கு உண்மையான நண்பன் சீனா -.!
27 Jul,2023
பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக சீனா செயற்படுவதாக புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன (ஓய்வு) மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 96 வது ஞாபகார்த்த விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு உறுதியான நட்பை
இலங்கைக்கு உண்மையான நண்பன் சீனா -அப்போ இந்தியா...! | Sri Lankas True Friend Is China
இலங்கைக்கு உறுதியான ஒரு நட்பை சீனா வழங்கியுள்ளது. அதற்கு எமது நன்றிகள். “சர்வதேச ரீதியில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சீனாவுக்கெதிராக முன்வைக்கப்பட்ட போதும், சீனா இலங்கைக்கு ஒரு உண்மையான நண்பனாக இருந்து, தோள்கொடுத்து உதவியதுடன் தேவையான புரிதலையும் அனுசரணையையும் வழங்கியது” என அவர் மேலும் தெரிவித்தார்.