சுவிஸ் தூதரக அதிகாரிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை! கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
14 Jul,2023
சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸிற்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தான் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதினையடுத்து அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம், 2019 நவம்பர் மாதம் தங்கள் ஊழியர் கனியா பெனிஸ்டர் கடத்தப்பட்டு அவரது விருப்பத்திற்கு எதிராக தடுத்து வைக்கப்பட்டதாகவும், தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு அச்சுறுத்தியதாகவும் அரசாங்கத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளின் பின்னர் சுவிஸ் தூதரக ஊழியர்களின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என கண்டறியப்பட்டதுடன், கனியா பெனிஸ்டர் 2019 டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்கத்கது.