சுபாஷ்கரன் வேண்டுகோளை அடுத்து முழு அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ரணில் ஒப்புதல் !
21 Jun,2023
லண்டன் வந்த இலங்கை ஜனாதிபதியை, லைக்கா உரிமையாளர் திரு சுபாஷ்கரன் மற்றும் Deputy Chairman பிரேம் சிவசாமி, ஆகியோர் இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் அரசியல் கைதிகளையும் தாம் விடுதலை செய்வதாக ரணில் ஒப்புக்கொண்டு, அதனை உறுதிசெய்துள்ளார்.
இலங்கை அபிவிருத்தி அடையவேண்டும் என்றால், தமிழர்களுக்கு ஒரு தீர்வு மிக முக்கியமானது என்பதனை சுபாஷ்கரன் அவர்கள் ஆணித்தரமாக முன்வைத்துள்ளார். இதனை ரணில் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில். முதல் கட்டமாக ஒரு நம்பிக்கையை பரஸ்பரம் உண்டாக்க, ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார். இது தமிழர்களை பொறுத்தவரை பெரும் காய் நகர்த்தலாக அமைந்துள்ளது.
இருப்பினும் சிலர் இந்த நிலையை அறிந்துகொள்ளாமல், ரணிலுக்கு எதிராக போராட்டம் என்று களத்தில் குதித்துள்ளார்கள். இந்த போராட்டங்களால் என்ன நடந்துவிடப் போகிறது ? தமிழர்களுக்கு தற்போது தேவை ஒரு பலமான அரசியல் நகர்வு தான். போராட்டம் அல்ல. இதனை அவர்கள் நிச்சயம் புரிந்துகொள்ளும் நாள் விரைவில் வர உள்ளது.