காங்கேசனுக்கான பயணிகள் கப்பல் சேவை இப்போதைக்கு இல்லை! .
17 Jun,2023
.
இந்தியாவிற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கான சாத்தியம் இல்லை என விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா காங்கேசன்துறையில் தெரிவித்தார்.

காங்கேசன் துறைமுக பயணிகள் இறங்குதுறை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,
தற்பொழுது காங்கேசன் துறையில் பயணிகள் ரேமினல் பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியா மற்றும் காங்கேசன் துறைமுகத்துக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அது எவ்வளவு காலத்தில் முடியும் என தற்பொழுது கூறமுடியாது. அது இந்த வருட கடைசியாக இருக்கலாம். அல்லது அடுத்த வருடமாக இருக்கலாம். ஆனால் வேலைகள் முடிவற்ற பின்னர் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.