இலங்கைியல் கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு
15 May,2023
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் இழைக்கப்படும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட வேண்டிய அவசரத்தை வலியுறுத்தி ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
களுத்துறையின் 16 வயது சிறுமியின் மரணம் மற்றும் ஆசிரியர் ஒருவரால் 16 மாணவிகள் துஷ்பிரயோகத்துக்கு ஆளானமை உள்ளிட்ட அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.