விடுதலைப்புலிகளின் தலைவரும் குடும்பத்தினரும் உயிருடனா - சொல்ஹெய்ம் வெளிப்படை!
06 Mar,2023
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக நோர்வேயின் முன்னாள் அமைச்சரும்,சிறிலங்காவிற்கான முன்னாள் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த மிகவும் சோகமான போரின் ஒரு பகுதியாக பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது மொத்த குடும்பத்துடன் இறந்துவிட்டார். அது மிகவும் சோகமான நிகழ்வு எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையே போர் நடைபெற்ற காலத்தில் முக்கியம்வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இடையேயான சமாதானப் பேச்சு வார்த்தையின் போது நான் பிரபாகரனை பலமுறை சந்தித்திருக்கிறேன்.
அதனடிப்படையில் சொல்கிறேன் தற்போது பிரபாகரன் உயிருடன் இல்லை, பிரபாகரன் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினரும் இறந்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றாக இணைந்து வாழ விரும்புகின்றனர் எனவும், தற்போது இலங்கை எதிர்காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.