நாட்டை சூறையாடிய ராஜபக்ஷர்கள் கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும் –
20 Feb,2023
எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை ராசபக்ஷ குடும்பம் கொள்கையடித்தமையே நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் சர்வதேசத்திடம் யாசகம் பெறுவதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய அவலநிலை கண்டு மனவேதனை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
முழு உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த இலங்கை, இன்று ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடியினால் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பம் மக்களாணை என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை தவறாக வழி நடத்தி ஆட்சியை கைப்பற்றி முழு நாட்டையும் சூறையாடியது என சந்திரிக்கா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் செய்தாலும் ராஜபக்ஷர்கள் கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.