தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறியதற்கு இலங்கை சிங்கள அரசில் வாதிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றார்கள், இதுபற்றிக் கூறிய முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர பல இலட்சம் மக்களைக் கொலை செய்த பிரபாகரன் தற்பொழுது நரகத்தில் தான் இருக்கின்றார் எனவே நெடுமாறனுக்கு நரகத்திற்குச் சென்று பிரபாகரனை பார்க்க ஆசையாக இருப்பதால் அடிக்கடி உளறுகின்றாரெனத் தெரிவித்தார்.
நெடுமாறனின் கருத்துக்குப் பதிலளித்த முன்னாள் இராணுத் தளபதி சரத் பொன்சேகா இலங்கை மற்றும் இந்திய தமிழ் அரசியல் வாதிகள் பிரபாகரனின் பெயரினை அடிக்கடி உச்சரிக்காவிடின் அரசியலில் பிழைப்பு நடத்த முடியாது எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மனநோயாளிகள்தான் அடிக்கடி பிரபாகரனின் பெயரை உச்சரிப்பார்கள் எனவும், உயிரிழந்து எரியூட்டப்பட்ட பிரபாகரன் மீண்டும் வருவதற்கு அவர் என்ன கடவுளா எனக் கேட்டுள்ளார்.