திருடர்களை பிடிக்க பொறுப்பேற்கவுள்ள பொன்சேகா
07 Feb,2023
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்கும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தலையீடு இல்லாமல் பணியை செய்ய அனுமதித்தால், பணியை செய்து, மக்கள் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்தும் சூழலை உருவாக்குவேன் என்றார்.
பாணந்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.