இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் உயிரிழப்பு
06 Feb,2023
இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸின் முகாமைத்துவ பணிப்பாளர் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அவர் தங்கியிருந்த தொடர்மாடியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
45வயதான இவர் தனது குடும்பத்தவர்களுடன் இந்தோனேசியாவிற்கு சென்றிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜகார்த்தா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.