பாலியல் தொழிலுக்காக 15 வயது சிறுமி விற்பனை - தாய் உட்பட நால்வர் கைது!
28 Jan,2023
பணத்திற்காக 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், சிறுமியின் தாய் உள்ளடங்கலாக நன்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை, பாணந்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியை பணத்திற்காக வயதான நபர்களுக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் தொடர்புபட்ட 42, 45, 54 மற்றும் 84 வயதுடைய பாணந்துறை, கெசல்வத்த மற்றும் கோரக்கன பிரதேசங்களைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான பெண்ணொருவர், சிறுமியின் தாயை ஏமாற்றி பணம் கொடுத்து சிறுமியை விற்பனை செய்தமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த தொழிலதிபர் தப்பித்துள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.