இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து - 7 பேர் பலி பலர் காயம்
21 Jan,2023
நானுஓயா - ரதெல்ல வீதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தேர்ஸ்டன் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று வருடாந்த கல்விப் பயணத்துக்கு சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது..
விபத்துக்குள்ளான பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.