யாழில் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தை தோண்ட நீதிமன்றம் அனுமதி
08 Jan,2023
கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணியொன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தினை தோண்டிப் பார்ப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு, குறித்த பகுதியினை தோண்டும் பணி நாளை திங்கட்கிழமை (9) காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, நீதிமன்ற உத்தரவை பெற்றே அவ்விடத்தை தோண்டும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.