3000 தடவைகள் சிவனடியை தரிசித்த ஜப்பான் நாட்டவர்
21 Dec,2022
இலங்கையில் தங்கியிருக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிக்கு ஒருவர், கடந்த 10 ஆண்டுகளில் 3000 தடவைகள் சிவனொளிபாதமலையைச் தரிசித்துள்ளார்.
சிவனொளிபாதமலை அடிவாரத்தில் உள்ள சாம சயித்தியவில் தங்கியிருக்கும் குறித்த பிக்கு நேற்று முன்தினம்(19) மாலை உச்சிக்கு சென்று தரிசனம் செய்து திரும்பிய போதே, தான் 3000 தடவைகள் சிவனொளிபாதமலை உச்சிக்குச் சென்று திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.