இலங்கையின் கிம்புலா எல குணா, பாகிஸ்தானின் ஹாஜி சலீம் ஆகியோரும் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது!
20 Dec,2022
இந்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது பேரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான கிம்புலா எல குணா, புகுடு கண்ணா உள்ளிட்டவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் தவிர, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தி வரும் ஹாஜி சலீம் என்ற பாகிஸ்தானியரும் உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் சிறப்பு முகாமில் இருந்தபோதே இந்திய உளவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் மொஹமட் அஸ்மின், அழகப்பெருமகே சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா சந்திரசேன, தனுஷ்க ரொஷான், வெல்ல சுரங்க மற்றும் திலீபன் ஆகியோரும் அடங்குவர்.