கோட்டாபயவை விரட்டியடித்தவர்களை கொடுமைப்படுத்தும் ரணில் -பகிரங்க குற்றச்சாட்டு
11 Dec,2022
கோட்டாபய ராஜபக்சவை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றியவர்களை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கொடுமைப்படுத்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இன்று எதிர்கட்சியின் செயற்பாடு நிறைவேற்றப்படுவதில்லை எனவும், அந்த பாத்திரத்தையும் மக்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் வருமான வரி சட்டத் திருத்த மசோதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.