இலங்கை இராணுவ அதிகாரிக்கு தடை விதித்தது அமெரிக்கா !
10 Dec,2022
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது
2008 இல் ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகவே அவருக்கு தடை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அதிகாரி, சித்திரவதை மற்றும் அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற வகையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.