இலங்கையிலிருந்த உக்ரேன் பிரஜை கைது!
02 Dec,2022
இன்று இரவு இலங்கையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்த 1 கோடி 37 இலட்சம் பெறுமதியான பணத்தினை கணினியைப் பயன்படுத்தி நவீன தொழிநுட்பம் மூலமாக மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதையடுத்து பொலிஸார் மேற்கொன்ட விசாரணையில் உக்ரேன் பிரஜை இருவர் உட்பட 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது இலங்கையில் தங்கியிருந்த இவ்விரண்டு உக்ரேன் பிரஜைகளும், கொழும்பு பல்கலைகழகத்தில் தகவல் தொழிநுட்ப பிரிவில் கல்வி கற்கும் 03 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது உக்ரேன் பிரஜைன் உதவியுனடன் இந்த பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.