அந்தரங்க உறுப்பை வெட்டிய கணவன்
27 Nov,2022
பொல்பித்திகம என்ற பிரதேசத்தில் தனது அந்தரங்க உறுப்பை கூரிய ஆயுதத்தால் அறுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மனைவி தன்மீது வீண்பழி சுமத்தினார் என்பதற்காக அவரது கணவன் இந்த செயலை செய்துள்ளார்.
பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த நபர், சனிக்கிழமை மாலை வெளியே சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது அவரது மனைவி வழிதவறிய நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கணவர் மீது குற்றம் சுமத்தியபோது அவர் வீண் பழி சுமத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
பின்னர் அவர் தனது ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இந்தநிலையில், வெட்டுக்காயங்களுடன் பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.